'தளபதி 64' நாயகியின் லேட்டஸ் அப்டேட்!

  • IndiaGlitz, [Wednesday,November 06 2019]

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் ஒரு பக்கம் சூப்பர்ஹிட்டாகி வசூல் மழையை பொழிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'தளபதி 64' படத்தின் நாயகி மாளவிகா மேனன் இன்று முதல் படத்தில் டெல்லியில் 'தளபதி 64' படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மேனன் 'தளபதி 64; படத்தின் மூலம் விஜய் ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மேனன், சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரிகிதா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.