'தங்கலான்' நடிகரை லண்டனில் சந்தித்த மாளவிகா மோகனன்.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன் ஹாலிவுட் நடிகருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் என்பவர் ’தங்கலான்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற மாளவிகா மோகனன் அவரை சந்தித்துள்ளார். இருவரும் சந்தித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் பல மாதங்களுக்கு பிறகு டேனியல் கால்டாகிரோன் அவர்களை லண்டனில் சந்திப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இருவரும் ’தங்கலான்’ படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் ’தங்கலான்’ படத்தில் நடித்திருக்கிறார்கள். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், ஜிவி. பிரகாஷ் குமார் இசையில், ஆர்.கே. செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியாடிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
Super fun catching up with @DanCaltagirone in London after so many months! ☺️ Both of us are so excited for you guys to finally watch #Thangalaan ! Can’t wait ☺️ pic.twitter.com/1Svlm7xgD5
— Malavika Mohanan (@MalavikaM_) October 16, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments