'மாஸ்டர்' புரமோஷனுக்கு மாளவிகாவின் மயக்க வைக்கும் டிரஸ்: வைரல் புகைப்படங்கள்

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று தென்னிந்திய மொழிகளில் ஜனவரி 13-ஆம் தேதி ’மாஸ்டர்’ வெளியாகும் என்றும், இந்த திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி இந்தியில் வெளியாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹிந்தியில் ’மாஸ்டர்’ படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. மும்பையில் சமீபத்தில் நடந்த ’மாஸ்டர்’ படத்தின் புரமோஷனில் இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் கலந்து கொண்டார். அவர் இந்த விழாவில் உச்சக்கட்ட கவர்ச்சி உடையுடன் கலந்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்டர் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாளவிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

இதுகுறித்து மாளவிகா தனது இன்ஸ்டாவில், ‘மும்பையில் ’மாஸ்டர்’ படத்தின் புரமோஷன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த படம் எனக்கு ஒரு மிகப்பெரிய எதிர் பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.