எனது போட்டோவை போட்டோஷாப் செஞ்சுட்டாங்க: அதிர்ச்சியில் மாளவிகா மோகனன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான மற்றும் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை போட்டோஷாப் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து, இந்த புகைப்படத்தை ஒரு சிலர் போட்டோஷாப் மூலம் ஆபாசமாக மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர் என்றும் ஒரு சில ஊடகங்களும் இதுபோன்ற புகைப்படத்தை பதிவு செய்து வருகின்றனர் என்றும் இதுபோன்ற மலிவான பத்திரிகைகளில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் வந்தால் புகார் அளிக்க உதவி செய்யவும் என்று மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனுஷின் ’மாறன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள மாளவிகா மோகனன், பாலிவுட் ஆக்சன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
This is a photo of mine from a few months back which somebody has photoshopped and created a fake vulgar one. A lot of people have been circulating that including media houses like @AsianetNewsTM , which is just cheap journalism. If you see the fake one please help & report. pic.twitter.com/y9QXDf5HHf
— malavika mohanan (@MalavikaM_) February 2, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com