ஷங்கரின் அடுத்த படத்தில் 'மாஸ்டர்' மாளவிகா மோகனன்?

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்த இயக்குனர் ஷங்கர் திடீரென அந்த படத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த படத்தை நிறுத்திவிட்டு, தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது வந்த தகவலின்படி ராம்சரண் தேஜா ஜோடியாக ’மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

மாளவிகா மோகனன் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் இதுதான் அவருக்கு முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாஸ்டர் படத்தை அடுத்து தனுஷின் 43வது படத்திலும் மாளவிகா மோகன் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

திமிங்கலத்தின் வாந்தி இத்தனை கோடியா? கடத்தல்காரர்கள் கைது!

ரூபாய் 8 கோடி மதிப்புள்ள திமிங்கல வாந்தி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனா இவர்? ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த புகைப்படம்!

'பிரிவோம் சந்திப்போம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர், 'ஈரம்' 'வேட்டைக்காரன்' 'ஆதவன்' 'ராவணன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி

நான் இந்த இயக்குநரின் தீவிர ரசிகன்… மனம் திறக்கும் ஜகமே தந்திரம் நடிகர் ஜோஜு ஜார்ஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “ஜகமே தந்திரம்” திரைப்படம் வரும் ஜுன் 18 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

வருமான வரி கூட கட்டமுடியவில்லை… கொரோனா தாக்கம் குறித்து பிரபல நடிகை உருக்கம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் கொரோனா காரணமாக வேலை இல்லை

ஒரே பிரசவம்...! 10 பிஞ்சுகள்.... உலக சாதனை படைத்த பெண்...!

ஒரு பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்மணி உலக சாதனை படைத்துள்ளார்.