மலேரியா தடுப்பூசிக்கு WHO ஒப்புதல்… யாருக்கெல்லாம் செலுத்தப்படுகிறது?
- IndiaGlitz, [Friday,October 08 2021]
கொசுக்களால் ஏற்படும் மலேரியாவிற்கு எதிராக உலகிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள “மாஸ்க்ரிக்ஸ்“ தடுப்பூசியை ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகள் மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள குழந்தைகளுக்கு செலுத்த WHO பரிந்துரை செய்துள்ளது.
உலகம் முழுவதும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனால் கொசு எனும் ஒட்டுண்ணிக்கு எதிராக, தற்போது முதல் முறையாக மாஸ்க்ரிக்ஸ் எனும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. காரணம் கொசுக்களால் ஏற்படும் மலேரியா காய்ச்சலால் ஆண்டுதோறும் 4 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
மலேரியாவிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இதுவரை 1 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதுகுறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் GlaxoSmithKline Plc எனும் நிறுவனமும் மற்ற சில நிறுவனங்களும் இணைந்து மலேரியாவிற்கு எதிராக மாஸ்க்ரிக்ஸ் எனும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன.
இந்தத் தடுப்பூசியை சஹாரா மற்றும் ஆப்பிரிக்காவின் நோய்ப்பரவல் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு செலுத்தும்படி WHO பரிந்துரை செய்திருக்கிறது. மேலும் இந்தத் தடுப்பூசியின் 4 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 இல் 4 பேருக்கு அவர்களது நோய்ப்பாதுகாப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதைத்தவிர இந்தத் தடுப்பூசி மற்ற நடவடிக்கைகளுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் என்று WHO வின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.