கொரோனாவுக்கு நடுவில் மலேரியா பாதிப்பு!!! இரட்டிப்பு தாக்குதலில் ஜிம்பாப்வே!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றன. ஜிம்பாப்வேவிலும் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது என்றாலும் தற்போது இந்நிலைமையை விட மலேரியா பாதிப்புத்தான் அந்நாட்டு மக்களை கவலை கொள்ள செய்திருக்கிறது.
ஜிம்பாப்வேவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஒபதியா மோயோ அந்நாட்டில் மலேரியாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை அந்நாட்டில் மலேரியா பாதிப்பினால் 131 பேர் இறந்து விட்டதாகவும் மேலும் 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேவின் மணிகலண்ட், மாஸ்விங்கோ மற்றும் மஷோனாலேண்ட்டின் கிழக்கு பகுதிகளில் அதிகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜிம்பாப்வே வில் பொதுவாக வெப்பமும் ஈர்ப்பதமும் இணைந்தே இருக்கும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் போன்ற மாதங்களில் மலேரியா பாதிப்பு அதிகமாக இருக்கும். இதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வருடமும் Epidemic பாதிப்புகளாக மலேரியா, காசநோய், எய்ட்ஸ் போன்ற தொற்றுநோய்கள் அந்நாட்டில் பரவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மோசமான பொருளாதாரச் சூழல், குறைவான மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் கொண்ட நாடான ஜிம்பாப்வே தற்போது கொரோனா பாதிப்புகளுக்கு எதிராகப் போராடி வருகிறது. கொரோனாவை விட மலேரியாவின் பாதிப்பு அதிகரித்து இருப்பதால் தற்போது அந்நாட்டின் சுகாதாரத் துறை விரைவான மலேரியா சோதனைகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து உலகச்சுகாதார அமைப்பு “கொரோனாவுக்கு நடுவில் ஜிம்பாப்வே மலேரியா பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இரண்டு நோய்த்தொற்றுகளில் மனிதர்களுக்கு எதனால் பாதிப்பு தோன்றுகிறது என்பதை அளவிட முடியாமல் மருத்துவர்கள் திண்டாட வேண்டிவரும் எனவும் எச்சரித்து இருந்தது. மேலும் தற்போதுள்ள சூழலில் இரட்டிப்பு பாதிப்புகளை சந்திக்க வேண்டிவரும் எனவும் WHO கூறியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments