close
Choose your channels

சன் டிவியின் 'மலர்' சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. விஜய் டிவி சீரியல் நடிகை இணைகிறாரா?

Saturday, June 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ‘மலர்’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகை திடீரென அந்த சீரியலில் இருந்து விலகுவதாகவும் அவருக்கு பதிலாக விஜய் டிவி சீரியல் நடிகை அந்த சீரியலில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சன் டிவியில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் ‘மலர்’ என்பதும் இந்த சீரியலில் ப்ரீத்தி ஷர்மா மற்றும் விஜே அக்னி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பதும் 400 எபிசோடுகளுக்கு மேல் சென்று உள்ள இந்த சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பப்பட்டாலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலின் நாயகியான ப்ரீத்தி ஷர்மா திடீரென இந்த சீரியல் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் அதனால்தான் அவர் விலக இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இன்னும் சிலர் இது குறித்து கூறிய போது இந்த சீரியலில் ப்ரீத்தி ஷர்மா கேரக்டர் கர்ப்பமாகும் காட்சிகள் வருவதாகவும் கர்ப்பிணியாக அவர் நடிக்க விரும்பாத விரும்பாததால் இந்த சீரியல் இருந்து விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’மோதலும் காதலும்’ என்ற சீரியலில் நடித்த அஸ்வதி என்பவர் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ப்ரீத்தி சர்மா இடத்தை அஸ்வதி சரியாக பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment