நீ கன்னித்தன்மையை எப்போது இழந்தாய்? மகனிடம் அம்மா கேட்கும் கேள்வியா இது? நடிகைக்கு குவியும் கண்டனம்.!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை தனது மகனிடம் ’நீ எப்போது கன்னித்தன்மையை இழந்தாய்’ என்ற கேள்வி கேட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ’ஒரு அம்மா மகனிடம் கேட்கும் கேள்வியா இது? என்று நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’உயிரே’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா. இவர் கந்த 1998 ஆம் ஆண்டு அர்பாஸ்கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் மலைக்கா அராரோ சில ஆண்டுகளில் தனது கணவரை பிரிந்து விட்ட நிலையில் தற்போது அவர் போனி கபூர் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருவதாகவும் 50 வயதான மலைக்காவை விட 12 வயது குறைவான 38 வயது அர்ஜுன் கபூரை காதலித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான வீடியோவில் மலைக்கா தனது மகனுடன் உரையாடும் காட்சிகள் உள்ளன. இதில் மலைக்கா தனது மகனிடம் 'நீ எப்போது உன்னுடைய கன்னித்தன்மையை இழந்தாய்? எனக்கு உண்மையான பதில் சொல்ல வேண்டும்’ என்று கேட்க, அவரது மகன் வெட்கப்பட்டு கொண்டே சிரித்துக் கொண்டிருக்கிறார்.
இதையடுத்து தாயாரை மடக்கும் வகையில் ’நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என கேட்டதை அடுத்து ’உண்மையாகவே இந்த கேள்வியை கேட்கிறாயா? என்று அவர் ஆச்சரியப்படுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ஒரு அம்மா தான் மகனிடமும், ஒரு மகன் தன் அம்மாவிடமும் கேட்க வேண்டிய கேள்வியா இது? என்ன கலாச்சாரம்? என்று நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com