எங்களுக்கு ஓகே தான்… 12 வயது சிறிய நடிகரை மணக்க விரும்பும் பாலிவுட் நடிகை கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் நடிகை மலைக்கா அரோரா தன்னைவிட 12 வயது சிறிய நடிகரான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார் என்பதும் இவர்கள் அவ்வபோது ஒன்றாக பொதுவெளியில் ஊர் சுற்றிவருவதும் ரசிகர்கள் அறிந்ததுதான். இந்நிலையில் தனது இரண்டாவது திருமணம் குறித்து நடிகை மலைக்கா அரோரோ நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். இந்தத் தகவல் சமூகவலைத் தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “உயிரே” படத்தில் வரும் “தையா தையா“ பாடலுக்கு நடிகர் ஷாருக்கானுடன் ஆட்டம்போட்டு பிரபலமானவர் நடிகை மலைக்கா அரோரா. இதையடுத்து பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரவேற்பு பெற்றார். தொடர்ந்து நடிகர் சல்மான் கானின் சகோதரர் அபாஸ் கானை 1998 இல் திருமணம் செய்துகொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக 2017 இல் விவாகரத்துப் பெற்றார். இந்த ஜோடிக்கு அர்ஹான் கான் எனும் ஒரு மகன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது 50 வயதை நெருக்கும் மலைக்கா அரோரா கடந்த 2019 இல் இருந்து பிரபல பாலிவுட் தயாரிப்பாளரின் மகனும் நடிகருமான அர்ஜுன் கபூரைக் காதலித்து வருகிறார். மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு தங்களது உறவுநிலை குறித்து வெளிப்படையாக இருவரும் கருத்துகளைப் பகிர்ந்தும் வருகின்றனர்.
தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மலைக்கா தனது இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். அதில் நாங்கள் இருவரும் தயாராக இருக்கிறோம் என்று நடிகர் அர்ஜுன் கபூருடனான திருமணம் குறித்துப் பேசியுள்ளார்.
மேலும், நான் அதைப்பற்றி யோசித்தேன். நான் மீண்டும் திருமணம் செய்து கொள்வது நெருடலாக இருக்கலாம். ஆனால் அது உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. நான் இந்த சமூகத்தை நம்புகிறேன். அன்பையும் தோழமையையும் நம்புகிறேன். அனைத்தையும் நம்புகிறேன். நான் எப்போது மீண்டும் திருமணம் செய்துகொள்வேன் என்று என்னால் பதிலளிக்க முடியாது. ஏனென்றால் ஒருவரின் வாழ்க்கையின் சில அம்சங்களை விட்டுவிடுவதையும் அதிகமாக திட்டமிடாமல் இருப்பதையும் நான் நம்புகிறேன். விஷயங்களைத் தொடர்ந்து திட்டமிடுவது வாழ்க்கையின் மகிழ்ச்சியை உறிஞ்சிவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நடிகர் அர்ஜுன் கபூர் வயதுக்கு ஏற்றாற்போல மிகவும் புத்திசாலி . அவருக்கு மிகவும் ஆழமான மற்றும் வலுவான ஆன்மா உள்ளது. அவர் மிகவும் சுதந்திரமான மற்றும் மிகவும் அக்கறையுள்ள ஒருவர் இந்த குணங்களை மிகவும் பாராட்டுகிறேன். நான் இப்போது என் பிரைம் நிலையில் உள்ளதாக உணர்கிறேன். அடுத்த 30 ஆண்டுகளுக்கு இப்படித்தான் பணியாற்ற விரும்புகிறேன். அர்ஜுனுடன் ஒரு வீட்டை அமைத்து எங்கள் உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
இதனால் நடிகர் அர்ஜுன் கபூர், நடிகை மலைக்கா அரோரா ஜோடி தங்களது உறவுநிலையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுசெல்ல விரும்புகின்றனர் என்று ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com