நான் ஒன்றும் முட்டாள் அல்ல… ரசிகர்களை வறுத்தெடுக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

  • IndiaGlitz, [Monday,January 24 2022]

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “தில்சே” (உயிரே) திரைப்படத்தில் இடம்பெற்ற “தக்கத் தையா தையா“ பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எப்போதும் என்னுடைய ஆடையைக் குறித்து விமர்சனம் எழுந்துகொண்டே இருக்கிறது, நான் ஒன்றும் முட்டாள் அல்ல எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

48 வயதான நடிகை மலைக்கா அரோரா பல வெற்றிப்படங்களில் ஒற்றைப் பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடையே பிரபலமானார். அதேபோல விஜே மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர் முன்னதாக அர்பாஸ் கானுடன் திருமண முறிவை செய்துகொண்டார். தொடர்ந்து தற்போது பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் அவ்வபோது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை மலைக்கா அரோரா சமீபத்தில் அளித்திருந்த பேட்டியொன்றில் எப்போதும் நான் அணியும் ஆடை குறித்து விமர்சனம் எழுந்துகொண்டே இருக்கிறது. நான் ஒன்றும் முட்டாள் அல்ல, எனக்குத் தெரியும் எனக்கு எது வசதியாக இருக்கிறது என்று. ஒருவர் அணியும் ஆடை என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். மற்றவர்கள் சொல்வதற்காக நாம் வாழ்க்கையை வாழ முடியாது. ஹெம்லைன், நெக்லைன் குறித்து விமர்சிப்பதை விட்டுவிட்டு மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக்கொடுங்கள் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

நடிகை மலைக்கா அரோரா தெரிவித்து இருக்கும் இந்தக் கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.