ஷோபாவில் நிர்வாண போஸ்… பிரபல நடிகரின் புகைப்படத்தால் இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை!
- IndiaGlitz, [Monday,May 29 2023]
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் நடிகை மலைக்கா அரோரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாலிவுட் இளம் நடிகர் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து தாறுமாறான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘உயிரே’ திரைப்படத்தில் ‘தையா தையா’ பாடலுக்கு நடனம் ஆடி இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை மலைக்கா அரோரா. பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்திவரும் இவர் தற்போது ஒருசில திரைப்படங்களில் மட்டும் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை 1998 இல் திருமணம் செய்துகொண்ட நடிகை மலைக்காக அரோரா கடந்த 2017 இல் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். இந்த திருமண உறவின்மூலம் 20 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை மலைக்கா அரோரா தன்னைவிட 12 வயது சிறியவரான பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார் என்றும் இவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் என்பதும் போன்ற தகவல்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வருகின்றன. மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தனர்.
நடிகர் அர்ஜுன் கபூர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் என்பதும் அவர் தற்போது பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவருமாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் அர்ஜுன் கபூர் ஷோபாவில் நிர்வாணமாக அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை நடிகை மலைக்கா அரோரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் நடிகை மலைக்கா அரோரா குறித்து விமர்சித்து வரும் நெட்டிசன்ஸ் பலரும் 50 வயது நடிகைக்கு இதெல்லாம் அவசியம்தானா? என்பது போன்ற நெகட்டிவ் கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.