சம்மரை சமாளிக்க நீச்சல் குளம் போட்டோஷுட்… 50 வயது நடிகையின் ஹாட் புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் நடிகை ஒருவர் நீச்சல் குளத்தில் இருந்தபடியே போட்டோஷுட் நடத்திய புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ திரைப்படத்தில் ‘தையா தையா’ பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர்தான் நடிகை மலைக்கா அரோரா. பல பாலிவுட் சினிமாக்களில் நடித்துள்ள அவர் தற்போது ஒருசில திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் மட்டுமே நடித்துவருகிறார். கூடவே பிட்னஸ் ஆர்வம் கொண்ட அவர் ஒருசில ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் குருரந்தவாவின் பாடல் வீடியோவில் அவர் சமீபத்தில் இடம்பெற்றிருந்தார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
மேலும் சமூகவலைத் தளங்களிலும் நடிகை மலைக்கா தொடர்ந்து ஆக்டிவாகவே செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அடிக்கடி போட்டோஷுட் புகைப்படங்களையும் கவர்ச்சி உடை புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிகை மலைக்கா பிரபல புகைப்பட கலைஞர் டப்போ ரத்னானி என்பவரது கைவண்ணத்தில் புதிய போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அதில் சில்வர் நிறத்தில் கவர்ச்சி உடையணிந்த நடிகை மலைக்கா அரோரோ கோடை வெப்பத்தைத் தணிப்பது போலவே அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். 1973 இல் பிறந்த நடிகை மலைக்கா அரோரா நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை 1998 இல் திருமணம் செய்துகொண்டு பின்னர் 2017 இல் விவகாரத்து செய்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தம்பதிகளுக்கு அர்ஹான் கான் எனும் ஒரு மகன் இருந்த நிலையில் மகனுக்கே 20 வயதாகிய நிலையில் நடிகை மலைக்கா அரோரா தனது 50 வயதில் இன்னும் இளமையாக நீச்சல் உடையில் கலக்கி வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை மலைக்காவின் நீச்சல் குளப் புகைப்படங்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments