சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மலாக்கா மாகாண கவர்னர் மதிய விருந்து

  • IndiaGlitz, [Tuesday,October 27 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்ததை அடுத்து தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக 'கபாலி' குழுவினர் மலேசியா சென்றுள்ளனர். இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று ரஜினிகாந்த் மலேசியாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இன்று மலேசியாவில் உள்ள மலாக்கா (Malacca) என்ற மாகாணத்தின் கவர்னரை ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது 'கபாலி' பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் உடனிருந்தார்.

சூப்பர் ஸ்டாரை வரவேற்ற Malacca கவர்னர், அவருக்கு மதிய விருந்து அளித்தார். இந்த விருந்தில் கவர்னர் மற்றும் கவர்னர் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

More News

கும்பகோணம் பள்ளி தீவிபத்திற்காக நடிகர்களிடம் வசூல் செய்த ரூ.60 லட்சம் எங்கே?

கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தையே குலுங்க வைத்த ஒரு சம்பவம் கும்பகோணம் பள்ளி தீவிபத்து. இந்த விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்....

மூத்த நடிகரின் மருத்துவ செலவிற்கு நடிகர் சங்கம் ரூ.15 ஆயிரம் உதவி

பழம்பெரும் நடிகர் திரு.காசிம் இன்று உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...

மலையுச்சியில் 'கெத்தாக' தொங்கிய உதயநிதி-எமிஜாக்சன்

உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடித்து வந்த 'கெத்து' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்ததை அடுத்து...

'வேதாளம்' டிரைலர் ரன்னிங் டைம்

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் 'வீரம்' சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேதாளம்' திரைப்படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ்...

அங்கோவார்ட் கோவிலில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்

கடந்த 2007ஆம் ஆண்டு பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன படம் 'ஓம் சாந்தி ஓம்'. ஷாருக்கான் நடித்த இந்த படத்தின் பெயரில் தமிழில் ஒரு படம் தயாராகி வருவது தெரிந்ததே...