சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மலாக்கா மாகாண கவர்னர் மதிய விருந்து
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்ததை அடுத்து தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக 'கபாலி' குழுவினர் மலேசியா சென்றுள்ளனர். இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று ரஜினிகாந்த் மலேசியாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இன்று மலேசியாவில் உள்ள மலாக்கா (Malacca) என்ற மாகாணத்தின் கவர்னரை ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது 'கபாலி' பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் உடனிருந்தார்.
சூப்பர் ஸ்டாரை வரவேற்ற Malacca கவர்னர், அவருக்கு மதிய விருந்து அளித்தார். இந்த விருந்தில் கவர்னர் மற்றும் கவர்னர் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments