மக்களின் சூப்பர் ஸ்டார் ரக்சிதா .. சொன்ன பிரபலம் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சீரியல் நடிகை ரக்சிதா பிக்பாஸ் வீட்டில் 91 நாட்கள் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை பிரேமி வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’மக்களின் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை கொடுத்து ஒரு நீண்ட பதிவை தனது இன்ஸ்டாவில் செய்துள்ளார், அந்த பதிவை பின்வருமாறு:
ஹாய் மை டியர் ரச்சு எவ்ளோ நாளாச்சு உன்னை பார்த்து? 90 நாளைக்கு அப்புறம் பிக் பாஸில் இருந்து நீ வெளியில வந்ததுக்கப்புறம் நான் இன்னைக்கு உன்னை மீட் பண்ணி இருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. எவ்ளோ நாளாச்சு...அப்படி ஒரு சந்தோஷம். ரொம்ப நல்லா பிக் பாஸ் பிளே பண்ண மை டியர், உனக்கு நிறைய பிரச்சனைகள் கண்டிப்பா வந்திருக்கும், சோதனைகள் வந்திருக்கும் அது எல்லாம் ரொம்ப பொறுமையா அழகா ஹேண்டில் பண்ண விதம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது.
எல்லாருக்கும் அழகா சமைச்சு போட்டு ஓகே எல்லார் கூடையும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருந்து மக்கள் மனசுல அவ்ளோ அழகா இடம் பிடித்தது எனக்கு பிடிச்சிருந்தது. எல்லா கேமும் அவ்ளோ அற்புதமாக விளையாடிய நீ எப்படியாவது டாப் 5 கன்டெஸ்டெண்ட்ல ஒரு ஆள நிச்சயம் வந்துருவ... அப்படின்ற பெரிய நம்பிக்கை எனக்குள்ள இருந்தது, ஆனா வர முடியல. உனக்கும் அலாதியான ஒரு நம்பிக்கை இருந்திருக்கும். ஆனா ஏன் நம்ம 90 நாட்களில் வெளியில வந்தோம், ஏன் டாப் 5ல வரல அப்படின்னு நம்ம யோசிச்சோம்னா அதுக்கு ஒரே ஒரு ஆன்சர் தான் இதைவிட பெரிய உயரத்துக்கு நம்ம போக போறோம்.
நம்ம தான் ஃபர்ஸ்ட் அப்படிங்கிற ரேஞ்சில நம்ம நிச்சயம் வரப்போறோம், கண்டிப்பா வருவோம். நீ எந்த ஃபீலும் பன்னிக்காத.. உனக்கான ஷோ உனக்கு நிச்சயமா கிடைக்கும் நீயும் நம்பர் ஒன் பொசிஷனுக்கு வருவ.. எப்படி இருந்தது எப்படி இருக்கு முடிஞ்சது உன்னால.. அதுவே ஒரு பெரிய சாதனை தான். இங்கே அத்தனை பேரும் உன்னுடைய ஃபேன்ஸ், பாலோவர்ஸ் அத்தனை பேரும் உனக்கு சப்போர்ட் பண்ணி இருக்காங்க, அவங்களுடைய வேலைகள் எல்லாம் விட்டுட்டு உனக்காக நேரம் ஒதுக்கி நிறைய கமெண்ட்ஸ் நிறைய போட்டோஸ் ஷேர் பண்ணுவது எல்லாமே பண்ணி இருந்தாங்க, ரொம்ப சந்தோஷமா இருந்தது.
அவங்க எல்லாருக்குமே உன்னுடைய சார்பான நன்றி சொல்லிக்கிறேன். இன்னும் நிறைய உயரத்துக்கு நீ போகணும். 90 நாளுக்கு அப்புறம் உன் கூட சேர்ந்து எடுத்துகிட்ட செல்ஃபி, எனக்கு பஸ்ட் நம்ம எடுத்த செல்பிய ஞாபகப்படுத்துது. மொபைல் இல்லாமல் உன்னால் எப்படி இருக்க முடிஞ்சது? அதுவே ஒரு பெரிய சாதனையா தான் நினைக்கிறேன். ஓகே எல்லாரும் மிஸ் பண்ணி இருப்ப.. உறவுகள் நண்பர்கள் என அத்தனையும் உனக்கு திரும்ப கிடைக்கட்டும், சந்தோஷம் கிடைக்கட்டும், நிம்மதி கிடைக்கட்டும், நல்ல ரெஸ்ட் எடு. திரும்ப எழுந்து வா, நம்ம மறுபடியும் ஃபர்ஸ்ட் பொசிஷனுக்கு முயற்சி பண்ணுவதற்கு ... ரைட் ..
ஆல் த பெஸ்ட் மைடியர் எல்லா வித வெற்றியும் உனக்கு கண்டிப்பா கிடைக்கட்டும் ... லவ் யூ மை டியர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com