எங்கள் தலைவர் மீது ஒரு துரும்பு பட்டால்? மக்கள் நீதி மையம் எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது சமீபத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று கமலஹாசன் அவர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில் கமல்ஹாசன் நேற்று போலீசார் முன் ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் கமல்ஹாசனிடம் போலீசார் விசாரணை செய்ததில் உள்நோக்கம் இருப்பதாகவும் தமிழக அரசு கமலஹாசனின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் போலீஸ் மூலம் அவரை மிரட்டி வருவதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்ற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இதற்காக இன்று எங்கள் தலைவர் அவர்களை சாட்சி என்ற பெயரில் காவல் நிலையத்துக்கு வரவழைத்து 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார்கள். இது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். விபத்து நடந்த தளத்திலிருந்து 4 நொடிகளுக்கு முன்புதான் தலைவர் அவர்கள் அந்த இடத்திலிருந்து சென்றுள்ளார். இந்த மனவேதனையால்தான் பிப்ரவரி 21ஆம் தேதி எங்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா எதிலும் தலைவர் அவர்கள் பங்கேற்கவில்லை. அது மட்டும் இல்லாமல் இனிமேற்கொண்டு நடைபெறும் படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் காப்பீடு செய்து தரவேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிக்கையாக கொடுத்துள்ளார்.
60 வருட சினிமா துறையில் 250 படங்களுக்கு மேலாக நடித்து வரும் எங்கள் தலைவர் சினிமாத் துறையைச் சார்ந்த அனைத்து ஊழியர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர். 1980 ஆம் ஆண்டு ரசிகர்மன்றம் வேண்டாம் என்று ஒதுக்கி மக்களுக்கு நல்ல சேவைகளை செய்கின்ற நற்பணி இயக்கத்தை ஏற்படுத்தியவர் எங்கள் தலைவர். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரும் ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் கடந்த 2018 பிப்ரவரி 21ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளைப் பெற்று மக்களிடம் ஆதரவு பெற்றுள்ளோம்.
எங்கள் வளர்ச்சியை பிடிக்காத தமிழக அரசு காவல்துறை மூலமாக சாட்சி என்கின்ற பெயரில் மூன்று மணி நேரம் இன்று விசாரணை நடத்தி உள்ளார்கள். தமிழக அரசே இந்த செயலை இத்துடன் நிறுத்தி கொள்ளவும் தலைவர் மீது சிறு துரும்பு பட்டாலும் எங்கள் லட்சக்கணக்கான இயக்கத் தோழர்கள் அவருக்கு அரணாக நின்று பாதுகாப்போம் என்றும் தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
#Indian2 #Indian2accident pic.twitter.com/SxpYsZ8xc0
— sripriya (@sripriya) March 3, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments