நீதிக்கு நீதி வேண்டும்: மத்திய மந்திரிக்கு எதிராக கமல் கட்சியின் அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்சியில் உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை அவரது கட்சியில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக ஆன்லைன் மூலம் இணைந்துள்ளனர்
இந்த நிலையில் கமல் தமிழக அரசை மட்டுமே விமர்சனம் செய்து வருவதாகவும், மத்திய அரசின் தவறுகளை அவர் கண்டுகொள்வதில்லை என்றும் ஒருசிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரியின் கருத்து ஒன்றுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நீதிக்கு நீதி வேண்டும் என்ற டைட்டிலில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது இதுதான்:
உச்சநீதிமன்றம் ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு இது. ஆனால் அதை நடைமுறைத்த இயலாது என்று மாண்புகிகு மத்திய அமைச்சர் திரு.நிதின்கட்காரி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது
காவிரி படுகையை ஒரு எண்ணெய் பீப்பாயாக மாற்றும் முயற்சிக்கு துணை
போகும் விதமாக பேசுவதும், நடந்து கொள்வதும் ஏற்புடையதல்ல. சட்டத்தின் ஆட்சியை நடத்த, அரசு தவறுகிற போதெல்லாம் நீதி மன்றங்களை நாடுகின்றோம். நீதிமன்றங்களின் தீர்ப்பையும் அரசு செயல்படுத்த மறுத்தால்..நீதி கேட்டு எங்கே செல்வது? யாரிடம் முறையிடுவது? என்கிற உணர்வு தோன்றுமானால் அது குடியரசுக்கும், நீதி அமைப்பிற்கும் பெருமை சேர்க்காது
எனவே, மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை ஆறு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பை வேண்டும்.
இந்த அறிக்கையின் மூலம் தமிழக நலனுக்காக மத்திய அரசையும் மக்கள் நீதி மய்யம் எதிர்க்க தயாராகிவிட்டதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com