சட்டத்தின் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: கமல் கட்சி அறிக்கை

ஐதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் இன்று என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்து வரும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்வியும்‌ - வேலைவாய்ப்பும்‌ பெண்களை, அவர்கள்‌ அடைபட்டு கிடந்த கூண்டின்‌ கதவுகளை உடைத்து வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசிக்க வழியமைத்து கொடுத்திருக்கிறது. இந்த சமூகம்‌ விதித்த கட்டுப்பாடுகளால்‌ வெதும்பி அடைபட்டு கிடந்தவர்கள்‌ அடிமைத்தளை அறுத்து சிறகசைத்து பறக்கும்‌ பொழுது விஷ அம்பு எய்த வேடன்‌ போல்‌ வக்கிர புத்தி உள்ள குரூர மனிதர்கள்‌ அவர்களை குதறி போட்டு விடுகிறார்கள்‌. ஒரு பெண்ணின்‌ பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும்‌ தேசத்தில்‌ நாம்‌
முன்னேறிய சமூகம்‌ என சொல்லிக்கொள்வது வெட்கக்கேடானது.

பாதுகாப்பற்றிருக்கும்‌ பெண்‌ சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும்‌ விதமாக ஏற்படுத்தப்பட்ட திட்டம்‌ தான்‌ நிர்பயா நிதி திட்டம்‌. ரூ.190.68 கோடி தமிழகத்திற்கான நிதியாக ஒதுக்கப்பட்ட நிலையில்‌ அதிலிருந்துவெறும்‌ ரூ.6 கோடி மட்டுமே: நமது மாநில அரசால்‌ பயன்படுத்தபட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாதுகாப்பிற்கான திட்டங்கள்‌ உருவாக்கப்பட்டு அதை முனைப்புடன்‌ செயல்படுத்தாத வரையில்‌ பெண்களின்‌ முன்னேற்றம்‌ என்பது கேள்விக்குறியாகத்தான்‌ இருக்கும்‌. பாலியல்‌ வன்முறை மற்றும்‌ உயிரிழப்பை ஏற்படுத்தும்‌ கயவர்கள்‌ சட்டத்தின்‌ பிடியிலிருந்து தப்பி விடுகிறார்கள்‌ என்ற எண்ணம்‌ இன்றைக்கு மக்களிடம்‌ வேகமாக பரவி வருகிறது. குற்றவாளிகள்‌ மீது காவல்துறையால்‌ வலுவான குற்றப்பத்திரிக்கையும்‌ நீதிமன்றத்தில்‌ திறமையான வழக்கறிஞர்களின்‌ வலிமையான வாதமும்‌ மட்டுமே பாதிக்கபட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தரும்‌ என்ற நிலை உருவாகாவிட்டால்‌ மக்கள்‌ குற்றவாளிகள்‌ தண்டிக்கபடவேண்டும்‌ என்ற ஆவேசத்தில்‌ என்கவுன்ட்டர்‌ போன்ற வழிமுறைகளை ஆதரிக்கும்‌ மனநிலைக்கு வந்துவிடுவார்கள்‌. எனவே நிர்பயா நிதியை பயன்படுத்தி இது போன்ற வழக்குகள்‌ வரும்‌ போது திறமையான சட்ட நிபுணர்களை கொண்டு வழக்கை கையாண்டு நீதி, நீதிமன்றத்திலேயே கிடைக்கும்‌ அதுவும்‌ தாமதமின்றி கிடைக்கும்‌ என்ற நம்பிக்கையை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும்‌.

தவறுகள்‌ தடுக்கப்பட வேண்டும்‌ நமது தேசத்தின்‌.சட்ட அமைப்பின்‌ மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்‌. குற்றம்‌ புரிவோருக்கு கடுமையாகவும்‌ வேகமாகவும்‌ தண்டனை கிடைக்கும்‌ என்ற அச்சம்‌
வர வேண்டும்‌.

இதை உருவாக்க வேண்டிய கடமை ஆளும்‌ அரசுகளுக்கே இருக்கிறது என்பதை நினைவூட்ட மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி விரும்புகிறது.
 

More News

கஞ்சா போதை.. பெண்ணிடம் சில்மிஷம்.. அடித்து உதைத்த பொதுமக்கள்.

சென்னையில் போதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற இளைஞர்களை பொது மக்கள் அடித்து உதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிக்க வந்த ஆரம்பத்தில் காமெடி கலந்த ரொமான்ஸ் திரைப்படங்களில் நடித்து வந்தார். அவர் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்',

தனுஷ்-மாரி செல்வராஜ் திரைப்படம் குறித்த முக்கிய தகவல்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய சுருளி மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய 'பட்டாஸ்' ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகளும்

'பிக்பாஸ் 3' நடிகரின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகரும் இயக்குனருமான சேரனின் அடுத்த திரைப்படம் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்பமயமாகும் பூமி. உணவைத் தேடி ஊருக்குள் வந்த பனிக்கரடிகள்.

ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள கிராமத்திற்குள் 50க்கும் மேற்பட்