வானதி ஸ்ரீனிவாசனுடன் விவாதம் செய்ய எங்கள் மாணவர் அணி போதும்: கமல் கட்சி அறிக்கை
- IndiaGlitz, [Sunday,March 28 2021]
சமீபத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வந்தபோது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வானதி ஸ்ரீனிவாசன் உடன் நேரடி விவாதத்துக்கு தயாரா? என சவால் எழுப்பி இருந்தார்
இந்த சவாலுக்கு பதில் அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று மாண்புமிகு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எங்கள் தலைவரை பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் உடன் விவாதத்திற்கு அழைத்து உள்ளார். விவாதம் செய்தால் தான் யாருக்கு நிர்வாகத் திறன் உள்ளது தெரியவரும் என்பது அவரது வாதம்
அவரது சவாலை ஏற்றுக் கொள்கிறோம். முதலில் இந்தியாவை ஆளும் மாண்புமிகு நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய விரும்புகிறார். அதனை அடுத்து நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்ய விரும்புகிறார். அடுத்தடுத்து பாஜக அமைச்சர்கள் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்து விட்டு கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற தலைவர்களுடன் விவாதம் வைத்துக்கொள்ளலாம்
மாண்புமிகு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும். ஏற்கனவே இரு முறை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு இப்போது மூன்றாவது முறையாக தோற்க தயாராகிறவர் வானதி சீனிவாசன். எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவரணி போதும்.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது,
MNM party's statement from party's General Secretary Propaganda Mr. C.K.Kumaravel regarding Ms. Smriti Irani's remarks on MNM Leader Mr. @ikamalhaasan .#Kamal_For_KovaiSouth
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 28, 2021
#கோவை_தெற்கில்_நம்மவர் #நம்ம_சின்னம்_டார்ச்_லைட்#டார்ச்லைட்_சின்னத்திற்கு_வாக்களிப்பீர் pic.twitter.com/iwhH01tGoF