திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்? எத்தனை தொகுதிகள்?
- IndiaGlitz, [Monday,February 01 2021]
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக உள்ளன. இந்த நிலையில் முதல்முறையாக சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் விரைவில் அடுத்த கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்
இந்த நிலையில் திடீரென திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் அக்கட்சிக்கு திமுக கூட்டணியில் 25 இடங்களை ஒதுக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் நிலையில் முதல் கட்சியாக கமல் கட்சி அந்த கூட்டணியில் இடம் பெற்று, 25 தொகுதிகளை பெற்று இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கட்சி தொடங்கி ஒரு சில ஆண்டுகளே ஆகிய கட்சிக்கு 25 இடங்களை திமுக அள்ளிக் கொடுத்துள்ளதால் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக, திமுக கட்சிக்கு மாற்றாக கமல் கட்சி இருக்கும் என நடுநிலையாளர்கள் கருதிய நிலையில் அக்கட்சியும் வழக்கம்போல் ஒரு திராவிட கட்சியில் கூட்டணியில் இணைந்ததும் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக கருத்துக்கள் நிலவி வருகின்றன.