காஞ்சி சங்கரர் மறைவிற்கு கமல்ஹாசன் கட்சி இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று காலை காலமான காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திரர் அவர்களுக்கு இந்தியாவில் உள்ள முன்னணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் முதல்வர், துணை முதல்வர் அமைச்சர்கள் மற்றும் பிற கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பகுத்தறிவாளராக இருந்தாலும் காஞ்சி சங்கரரின் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய கட்சியின் சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதியான சங்கராச்சாரியார் மதிப்பிற்குரிய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்' இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout