நடிகர்களின் கட்சிகளில் தவறாமல் இடம் பிடிக்கும் 'மக்கள்'
- IndiaGlitz, [Wednesday,August 29 2018]
திரையுலகில் உள்ள நடிகைகள் தங்களுடைய மார்க்கெட் குறைந்துவிட்டால் தொலைக்காட்சி சீரியல்களுக்குக் செல்வது வழக்கம். அதேபோல் திரையுலகில் மார்க்கெட் குறையும் நடிகர்கள் அடுத்ததாக அரசியலில் இறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் நடிகர்களுக்கு அரசியல் ஆசை அதிகரித்துள்ளது.
முதலில் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கினார். அவரை அடுத்து 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ள ரஜினிகாந்த் விரைவில் இதனை அரசியல் இயக்கமாக அறிவிக்கவுள்ளார். அந்த வகையில் இன்று விஷால் 'மக்கள் நல இயக்கம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். விஜய்யின் 'விஜய் மக்கள் மன்றம்' எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் நடிகர்களின் அரசியல் கட்சியில் 'மக்கள்' என்ற பெயர் தவறாமல் இடம்பிடித்துள்ளது என்பது ஒரு அபூர்வ ஒற்றுமையாக கருதப்படுகிறது. அதேபோல் திராவிடம், கழகம், என்ற வார்த்தையை நடிகர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரிய நடிகர்கள் தனித்தனியாக கட்சி ஆரம்பிப்பதை விட 'நடிகர்கள் மக்கள் நல இயக்கம்' என்ற கட்சியை அனைவரும் சேர்ந்து ஆரம்பித்தால் அந்த கட்சி ஆட்சியை பிடிக்க ஒரு வாய்ப்பு உள்ளது. அதனைவிடுத்து தனித்தனியாக ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு கட்சி ஆரம்பிப்பதால் என்ன பயன் கிடைக்கும் கிடைக்கும் என்பதை தேர்தலுக்கு பின்னர் நடிகர்கள் புரிந்து கொள்வார்கள்