'மேக்கிங் ஆஃப் வந்தியத்தேவன்': செம வீடியோவை வெளியிட்ட லைகா..!

  • IndiaGlitz, [Saturday,March 18 2023]

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் இந்த படம் முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் புரமோஷன் பணிகளை பல குழுவினர் தொடங்கிவிட்டனர் என்பதும் நாளை மறுநாள் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததை.

இந்த நிலையில் பொன்னின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் ஒன்றான வந்தியத்தேவன் கேரக்டரின் மேக்கிங் குறித்த வீடியோவை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

வந்தியத்தேவன் காஸ்ட்யூம் அணிந்து அந்த லொகேஷனில் ஒரு சீன் செய்து விட்டாலே நாம் அந்த கதையுடன் ஒன்றி விடுவோம் என்று கார்த்தி இந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும் வந்தியத்தேவன் கேரக்டருக்கான காஸ்டியூம் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒரு நிமிடம் உள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்.