மேக்கப் கலைஞர் தீக்சிதாவின் நட்சத்திர அவதாரங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையுலகில் மேக்கப் கலைஞர்களின் பணி இன்றியமையாத ஒன்று. அழகில்லாதவர்களுக்கு அழகூட்டுவதும், அழகானவர்களை அழகுக்கு அழகூட்டுவதும் மேக்கப் கலைஞர்களின் பணியாக உள்ளது.
இந்த நிலையில் தீக்சிதா என்ற மேக்கப் கலைஞர் பல முன்னணி நடிகைகளை போல தனக்கு தானே மேக்கப் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான அனுஷ்கா ஷர்மா, தீபிகா படுகோனே, ஸ்ரேயா , ஓவியா, தமன்னா, அனுஷ்கா ஷெட்டி, உலக அழகி மனுஷி சில்லார், சோனம் கபூர் போன்ற தோற்றத்தில் அவர் தன்னை மேக்கப் செய்து கொண்டு அவற்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வேகமாக வைரலாகி வருகிறது. இன்றைய மேக்கப் கலைஞர் நாளைய நட்சத்திரமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பல கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments