ஷங்கருக்கு எதிராக லைகா எடுத்த அதிரடி நடவடிக்கை!

  • IndiaGlitz, [Friday,May 14 2021]

’இந்தியன் 2’படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது என்பதும் இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது என்பதும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் மாதம் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர், ராம்சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு திரைப்படத்தை இயக்க ஆரம்பகட்ட பணிகளில் இருக்கும் நிலையில் லைகா நிறுவனம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்து உள்ளது.

தெலுங்கு மற்றும் இந்தி பிலிம் சேம்பர் நிர்வாகிகளுக்கு லைகா நிறுவனம் கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் எங்கள் தயாரிப்பில் உருவாகும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களை ஷங்கர் இயக்க அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராம்சரண் தேஜா இயக்கும் தெலுங்கு படத்தை மட்டுமின்றி இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்கையும் ஷங்கர் இயக்க உள்ளதை அடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்தி பிலிம் சேம்பர் நிர்வாகிகளுக்கு லைகா நிறுவனம் கடிதம் எழுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் இந்த படம் முடிவுக்கு வருமா? அல்லது பாதியில் கைவிடப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.