மாகபா மனைவியா இவர்? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர், அது இது எது, கலக்கப்போவது யாரு உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவர் தொலைக்காட்சியில் மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும்’வானவராயன் வல்லவராயன்’ ’அட்டி’ ’மீசையை முறுக்கு’ ’பஞ்சுமிட்டாய்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர்களின் ஒருவரான மாகாபா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் ஒரு மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தனது மற்றும் தனது மகனின் புகைப்படத்தை மட்டும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வரும் மாகாபா ஆனந்த் வெகு அரிதாகவே மனைவியின் புகைப்படத்தை பதிவு செய்வார். கடந்த ஜனவரி மாதம் மனைவியின் பிறந்தநாள் அன்று மனைவியுடன் படகில் செல்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார்.

இந்த நிலையில் தற்போது மாகாபா தனது மனைவியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் மாகாபா மனைவியா? என ஆச்சரியத்துடன் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து, இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.