'கடாரம் கொண்டான்' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,January 09 2019]

விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் 'கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் மற்றும் ஒருசில பேட்ச் பணிகள் மட்டுமே மீதமிருப்பதாகவும் அதன்பின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவிருப்பதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து நேற்றிரவு நடந்த சிறப்பு விருந்தில் விக்ரம், நாசர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

விக்ரம், அக்சராஹாசன், நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், '8 தோட்டாக்கள்' பட நாயகி மீராமிதுன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசர் பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 15ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஸ்வாசம் படத்திற்கு தடை: 3 ஏரியா அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று ஏரியாக்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

'பேட்ட' ரிலீசுக்கு அடுத்த நாள் வெளியாகும் அனிருத் பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் பிரபலத்தின் வாரிசு அறிமுகம்

கடந்த ஆண்டின் வெற்றிப்பட நாயகனாக விளங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'மாமனிதன்'.

சிம்பு-சீமான் படத்தின் தயாரிப்பாளர் யார்?

சீமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படம் ஒரு பரபரப்பான அரசியல் கலந்த படமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம்

'கனா' வெற்றி விழாவில் சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த பிரபல நடிகை

சமீபத்தில் நடைபெற்ற 'கனா' வெற்றி விழாவில் பேசிய படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், 'நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடி வருவதாகவும்