'அமரன்' படம் குறித்து மேஜர் முகுந்த் மனைவியின் எமோஷனல் பதிவு.. ராஜ்குமார் பெரியசாமியின் ரியாக்சன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'அமரன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த படம் குறித்து மேஜர் முகுந்த் மனைவி தனது சமூக வலைத்தளத்தில் எமோஷனல் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிவகார்த்திகேயனின் 23 வது படமான 'அமரன்’ படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே இந்த படம் இந்தியாவுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு கதையாக தான் இருக்கும் என்று ரசிகர்களால் யூகிக்கப்பட்டது. முகுந்த் அவர்களின் வீர மரணத்தை பெருமைப்படுத்தும் வகையில் இந்த படம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் 'அமரன்’ படம் குறித்து முகுந்த் அவர்களின் மனைவி தனது சமூக வலைத்தளத்தில் எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.
அதில் 'அமரன்’ என்ற பெயர் எப்போதும் என் மனதில் நிறைந்திருக்கும் ஒரு சொல், இதை எப்படி சொல்வது என்று ஆயிரக்கணக்கான முறை நான் யோசித்து இருக்கிறேன். இந்த நிகழ்வு நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் எனது கணவரின் நினைவு, தேச பக்தியை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு காத்திருக்கிறேன். அழியாத துக்கம், எல்லையற்ற அன்பு, மாறாத நம்பிக்கை கலந்த உற்சாகம் ஆகியவற்றுடன் இந்த படத்தை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒரு அன்பான ஆத்மாவை எங்கள் குடும்பம் ஒரு உயர்ந்த காரணத்திற்காக இழந்த நிலையில் அந்த துக்கத்தை நாங்கள் தாங்கிக் கொண்டு வலிமையோடு நிற்கிறோம். ஜெய்ஹிந்த்! பதிவு செய்துள்ளார்.
இந்த எமோஷனல் பதிவுக்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பதிலளிக்கையில் ’என்னையும் என்னுடைய குழுவையும் நம்பி இந்த பெரிய பொறுப்பை கொடுத்த முகுந்த் அவர்களின் மனைவி இந்து அவர்களுக்கு நன்றி! மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரின் தன்னலமற்ற சேவைக்கு என்றும் நாங்கள் கடமை பட்டு இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
#AMARAN Dear Indhu Rebecca Ma’am, Thank you for trusting me and our team with this huge responsibility!
— Rajkumar Periasamy (@Rajkumar_KP) February 17, 2024
We are forever indebted to #MajorMukundVaradarajan sir, You and the family for the selfless service! @ikamalhaasan #Mahendran @Siva_Kartikeyan @Sai_Pallavi92 @gvprakash… pic.twitter.com/Nj6FLgF3In
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com