'இந்தியன் 2' படப்பிடிப்பில் திடீர் விபத்து: 3 பேர் பலி ,10 பேர் காயம்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே உள்ள தனியார் பிலிம்சிட்டி ஒன்றில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும் இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டதாகவும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட
— Kamal Haasan (@ikamalhaasan) February 19, 2020
அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 19, 2020
முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது.
இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com