close
Choose your channels

நிர்வாணக் கோலத்தில் வேலைக்காரி… இப்படி ஒரு சேவையா???

Monday, December 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நிர்வாணக் கோலத்தில் வேலைக்காரி… இப்படி ஒரு சேவையா???

 

இங்கிலாந்தில் வீட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் நிறுவனம் ஒன்று அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணத்தோடு வேலைச்செய்ய பெண்களை அனுப்பி வைக்கிறது. இதற்கு கட்டணமாக வசூலிக்கப்படும் பணம் மற்ற நிறுவனங்களைவிட மிக அதிகமாக இருந்தாலும் இச்சேவை நிறுவனத்தை தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா நேரத்தில் தொடங்கப்பட்ட Naked cleaning company எனும் நிறுவனம் இங்கிலாந்தில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து வீட்டு வேலைக்கு வரும் பெண்கள், கொடுக்கும் காசைப் பொறுத்து மேலாடையை கழட்டி விட்டோ அல்லது உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமலோ வேலைப் பார்ப்பார். இப்படி வேலைப் பார்க்க வேண்டும் என்றால் அரை நிர்வாணத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.6,700 முழு நிர்வாணத்துக்கு ரூ.8,500 என வசூலிக்கப்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு தொகையா என்று எந்த கேள்வியும் எழுப்பாமல் பலர் இந்நிறுவனத்தை கொரோனா நேரத்தில் தொடர்பு கொள்வதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் இப்படி ஒரு நிறுவனம் இயங்க முடியுமா எனக் கேள்வி எழலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டின் சட்டத்தின்படி இது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு கிடையாது என்றே சொல்லப் படுகிறது. ஆனால் நிர்வாணமாக வேலைப்பார்க்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு தொலைக்காட்சிகள் சில விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத அதன் உரிமையாளர்கள் இதேபோன்று ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா என்று அதன் கிளையை பரப்ப தயாராகிக் கொண்டு இருக்கின்றனர். அடுத்ததாக துபாயில் இந்த நிறுவனத்தைத் தொடங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியுள்னர்.  அரபு நாகரிகத்தின் உச்சக்கட்டமான துபாயில் இப்படி நிறுவனம் இயங்க முடியுமா? என்று சந்தேகம் வந்தாலும் அதற்கான முழுமூச்சில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment