'அசுரகுரு' படத்திற்காக அசுரத்தனமாக பயிற்சியில் பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் பிரபு நடிப்பில் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்சன் படம் 'அசுரகுரு'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டருக்காக அசுரத்தனமாக உழைத்த வீடியோ ஒன்றை இந்த படத்தின் நாயகி மஹிமா நம்பியார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
பைக் ஓட்டுவது, வில்வித்தை பயிற்சியில் ஈடுபடுவது ஆகிய பயிற்சிகளோடு ஸ்டைலாக சிகரெட் புகைப்பது முதல் அந்த வீடியோவில் உள்ளது. இந்த கேரக்டருக்காக தான் அதிக பயிற்சி எடுத்துள்ளதாகவும், ஒரு சாதாரண பெண்ணில் இருந்து ஆக்சன் பெண்ணாக மாறும் முயற்சி என்பது சாதாரணம் இல்லை என்றும், தன்னால் முடிந்த அளவுக்கு இந்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளதாகவும் மஹிமா நம்பியார் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார், கோவிந்த் நாம்தேவ், ஜெகன், யோகிபாபு, குமரவேல், மனோபாலா, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
My excitement knew no bounds when I got the character sketch for #Asuraguru. The transformation from the girl next door to this role was not easy. Here is a training video I wanted to share with you☺️ @iamVikramPrabhu @A_Raajdheep @JsbSathish @idiamondbabu pic.twitter.com/JjMz3APXsC
— Mahima Nambiar (@Mahima_Nambiar) May 18, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments