'சந்திரமுகி 2' படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த மஹிமா நம்பியார்.. வாழ்த்து தெரிவித்த ராகவா லாரன்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய தகவலை நடிகை மஹிமா நம்பியார் தெரிவித்துள்ள நிலையில், ராகவா லாரன்ஸ் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி ’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 'சந்திரமுகி 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு ஒரு பக்கமும், போஸ்ட் புரொடக்ஷன் பாக்கம் இன்னொரு பக்கமும் நடைபெற்று வருகிறது
வேட்டையன் கேரக்டரில் ராகவா லாரன்ஸ், சந்திரமுகி கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. ஆஸ்கார் விருது வென்ற எம்எம் கீரவாணி இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர். இதனை தனது சமூக வலைத்தளத்தில் நடிகை மஹிமா நம்பியார் தெரிவித்துள்ளார். 'சந்திரமுகி 2’ படத்தின் கடைசி பாடல் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளோம். ராகவா லாரன்ஸ் அவர்களுடன் இணைந்து ஒரு பாடலில் நடனம் ஆட வேண்டும் என்ற எனது கனவு தற்போது தான் நிறைவேற உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதற்கு ராகவா லாரன்ஸ் டுவிட்டர் பக்கத்தில் ’ஆல் த பெஸ்ட் நன்றி’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Thank you Mahima @Mahima_Nambiar
— Raghava Lawrence (@offl_Lawrence) August 1, 2023
All the best 😊 https://t.co/XlwI9m2xrv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments