பெண்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்… அதுவும் குறுகிய காலத்தில்… விவரங்கள் இதோ?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிமியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சேமிப்பு பத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதை பயன்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தபால் நிலையத்திற்கு முன்னால் வரிசையில் நின்றதைத் தொடர்ந்து ஊடகங்களில் பரவலாகியது.
பொதுவாக சேமிப்பு திட்டம் என்றாலே நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் எனப்படும் MSSC திட்டத்தில் இணைந்து வெறும் 2 வருடத்தில் நிறைய வட்டித் தொகையைப் பெற்று சேமிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?
உண்மையில் மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் எனப்படும் MSSC திட்டத்தின் முதிர்வு காலம் வெறும் 2 வருடங்கள்தான்.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்துத் தபால் நிலையங்களிலும் இந்த MSSC கணக்கை துவங்கி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தில் இணைவதற்காக ஆதார் மற்றும் பார்ன் கார்ட் இருந்தால் மட்டுமே போதுமானது.
தபால் நிலையத்திற்கு சென்று MSSC திட்டத்திற்கு கொடுக்கப்பட்டு இருக்கும் விண்ணப்பப் படிவத்தை வாங்கி நிரப்பிக் கொடுத்தால் இந்தத் திட்டத்தில் எளிதாக இணைய முடியும். ஆன்லைனில் கிடைக்கும் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பின்னர் நேரடியாக தபால் நிலையத்திற்கு சென்றும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
MSSC திட்டத்தில் ஒரு நபர் ரூ.1,000 - ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். எடுத்ததும் ரூ.2 லட்சத்தை கணக்கில் போட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
ஒருவர் ரூ.1,000 டெபாசிட் செய்து பின்னர் படிப்படியாக ரூ.2 லட்சத்திற்குள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தனது கணக்கில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
இப்படி டெபாசிட் செய்யும் தொகைக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இது மற்ற வங்கிகளில் பிக்சட் டெபாசிட் தொகைக்கு கொடுக்கும் வட்டியை விட அதிகம்.
இதைத்தவிர இந்தத் திட்டத்தில் இன்னும் ஒரு கூடுதல் சிறப்பு காணப்படுகிறது. அதாவது முதல் காலாண்டில் கொடுக்கப்படும் வட்டி பணத்திற்கும் சேர்த்து அடுத்த காலாண்டில் வட்டி கிடைக்கும். இதனால் கூடுதல் வட்டியை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலும் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட MSSC பத்திரக் கணக்கையும் தொடரலாம். இதனால் ஒரு நபர் 2 லட்சத்திற்கு மேலும் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் இந்த MSSC திட்டத்தில் போட்டு வைத்து வட்டியை பெற்றுக் கொள்ளலாம்.
1-18 வயதுடைய சிறுமிகள் சார்பாக அவரது பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம். அடுத்து 18 வயதிற்கு மேற்பட்ட எந்த வயது பெண்களும் இந்தத் திட்டத்தில் இணைய முடியும்.
ஆனால் ஒரு நபர் ஒன்றிற்கு மேற்பட்ட MSSC கணக்கை துவங்க வேண்டுமானால் குறைந்தது 3 மாத இடைவெளிக்குப் பிறகே புதிய கணக்கை துவங்க இயலும்.
இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புழக்கத்திற்கு வந்த MSSC திட்டம் வரும் 2025 மார்ச் 31 வரை பயன்பாட்டில் இருக்கும்.
MSSC திட்டத்திற்கு 2 வருடம் முதிர்வு காலமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை நடுவில் பணம் எடுக்க முடியுமா? என்ற கேள்வி வரலாம்.
கணக்குத் துவங்கி ஒருவருடம் கழிந்த பிறகு செலுத்திய பணத்தில் இருந்து 40% பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளவும் இந்தத் திட்டத்தில் வழி உண்டு.
அதேபோல நோய் தொடர்பான மருத்துவ உதவிகளுக்காக இந்தத் திட்டத்தில் இருந்து பணத்தை திரும்ப எடுத்துப் பயன்பெறவும் முடியும்.
ஆனால் இடையில் பணத்தை திரும்பபெறும்போது வட்டி விகிதத்தில் 2% குறைத்துக்கொண்டு வெறும் 5.5% வட்டியை மட்டுமே கொடுப்பார்கள்.
ஒருவேளை MSSC கணக்கு முதிர்வு காலத்தை எட்டுவதற்கு முன்பே சம்பந்தபட்ட நபர் இறந்துவிட்டால் திட்டம் துவங்கிய 6 மாதத்திற்குள் வட்டி, பணம் முழுவதுமாக கைக்கு கிடைத்துவிடும்
18 வயதிற்கு குறைவான சிறுமியாக இருக்கும்போது பெற்றோர்கள் இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சேமிப்பு திட்டத்தில் MSSC திட்டம் மிகக் குறுகிய கால முதிர்வு கொண்டது என்பதுதான் இதில் இருக்கும் மிகப் பெரிய அம்சமாகக் கருதப்படுகிறது. மேலும் வட்டிக்கு வட்டி என்ற அம்சமும் இதில் புதிது. மேலும் மற்ற வங்கிகளை விட பிக்சட் டெபாசிட் பணத்திற்கு 7.5 எனும் கூடுதல் வட்டி கொடுக்கப்படுகிறது.
எனவே அருகில் இருக்கும் தபால் நிலையங்களுக்குச் சென்று உடனே MSSC கணக்கை துவங்கி அதிக சேமிப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com