மகேஷ்பாபுவுக்கு அதிர்ச்சி தகவல் கொடுத்த மருத்துவமனை நிர்வாகம்: ரசிகர்கள் பிரார்த்தனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை மகேஷ்பாபு குடும்பத்தினர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக இன்று ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் சற்றுமுன் தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் கிருஷ்ணா அவர்கள் இன்று அதிகாலை 1.15 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் அவர் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருவதாக கூறுகிறது. தற்போதைய நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் வென்டிலேட்டர் உள்ளிட்ட சிகிச்சை வசதி அவருக்கு செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதய நிபுணர்கள், நரம்பியல் நிபுணர் உள்பட மருத்துவ குழு ஒன்று அவருடைய உடல் நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா விரைவில் குணமடைய வேண்டும் என மகேஷ்பாபுவின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Super star #Krishna garu's health is stable now. We are providing best of treatment. pic.twitter.com/NgWavquc0H
— ?????????????????????? (@UrsVamsiShekar) November 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments