வங்கிக்கணக்கு முடக்கம் குறித்து மகேஷ்பாபு விளக்கம்
- IndiaGlitz, [Saturday,December 29 2018]
டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வங்கிக்கணக்கை நேற்று ஜிஎஸ்டி அதிகாரிகள் முடக்கியதாகவும், அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் இதுகுறித்து மகேஷ்பாபுவின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
'ஜி.எஸ்.டி அலுவலகத்தின் அறிக்கையின்படி கடந்த 2007-08ம் ஆண்டில் விளம்பர தூதராக இருந்ததற்கான சேவை வரியை மகேஷ்பாபு கட்டவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய காலத்தில் விளம்பர தூதர் சேவைக்கு சேவைவரி விதிக்கப்படவில்லை. விளம்பர தூதருக்கான சேவை வரி கடந்த 2010-ம் ஆண்டில்தான் விதிக்கப்பட்டது
'வரி கட்டுவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, வங்கிக் கணக்கு முடக்கம் தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் வரி செலுத்துவோருக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது