திரையுலகில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் மகள்! ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா?

  • IndiaGlitz, [Monday,November 11 2019]

திரையுலகில் மாஸ் நடிகர்களாக இருக்கும் பலரது வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாகி வரும் நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா தற்போது திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

ஹாலிவுட் திரைப்படமான ‘Frozen II' திரைப்படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பதையும் இதில் தமிழ் பதிப்பில் எல்சா கேரக்டருக்கு நடிகை ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் இளவயது எல்சா கேரக்டருக்கு மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா குரல் கொடுத்துள்ளாராம். இவரது குரலுக்கு ‘Frozen II' ரசிகர்கள் ஆதர்வு கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வால்ட் டிஸ்னி தயாரித்திருக்கும் பிரமாண்டமான திரைப்படம் ‘Frozen II' தமிழ் உள்பட உலகின் பல மொழிகளில் வரும் 22ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரான ‘எல்சா’ என்ற கேரக்டரில் பிரபல நடிகை Idina Menzel' நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது