'இரும்புத்திரை'க்கு பாராட்டு தெரிவித்த சூப்பர் ஸ்டார் நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,June 19 2018]

விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஷால் படங்களில் இதுவரை இல்லாத வகையில் மிகச்சிறந்த ஓப்பனிங் வசூல் கொடுத்த படம் இதுதான் என்பதும் ரூ.50 கோடி வசூல் செய்த விஷால் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் ஜூன் 1ஆம் தேதி முதல் தெலுங்கில் வெளியானது. விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகிய மூவருக்குமே தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருந்ததால் இந்த படம் தெலுங்கிலும் ஹிட்டானது. பிரபல தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இந்த படத்தின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தனது சமூக வலைத்தளத்தில் 'இரும்புத்திரை' திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இயக்குனர் மித்ரன் அவர்களின் விஷன் மற்றும் இயக்கம் அபாரமாக இருந்ததாகவும், இந்த படத்திற்காக அவர் செய்த ஆராய்ச்சி படத்தின் வேகத்தை அதிகரித்துள்ளதாகவும் கூறிய மகேஷ்பாபு, விஷால் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

More News

கிளாமராக நடிக்க மாட்டேன் எம்பிரான் பட நாயகி - ராதிகா ப்ரீத்தி

கர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான்

விஜய்யை அடிமையாக்கிய வீடியோ கேம் எது தெரியுமா?

தளபதி விஜய்யின் பிறந்த நாள் இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட உலகம் முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

பிக்பாஸ் இல்லத்தில் மோதலின் தொடக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சிறுசிறு மோதல்கள் நடந்தாலும் அந்த மோதல் பெரிய அளவில் இல்லை. மும்தாஜை பார்த்து பொன்னம்பலம் 'மல மல என்ற பாட்டை பாடியது,

ஜிவி பிரகாஷ் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'குப்பத்து ராஜா' திரைப்படம் வெகுவிரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர் இன்று சென்னை கடற்கரையை சுத்தம் செய்தனர்

'சீமராஜா' சிவகார்த்திகேயனுக்கு இன்று பிரிவு உபச்சார விழா

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீமராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது.