விஜய் ஜோடியாக மகேஷ்பாபு மனைவி: திடீரென ஏற்பட்ட திருப்பம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த படம் ஒன்றில் மகேஷ் பாபுவின் மனைவி நடிக்க ஒப்பந்தம் ஆகி அதன் பின்னர் திடீரென விலகி உள்ளதாக நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ரமணா இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’திருமலை’. இந்த படத்திற்கு பின்னர் தான் விஜய் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முதலில் விஜய் ஜோடியாக நடிக்க மிஸ் இந்தியா பட்டம் பெற்ற நம்ரதாவை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர். இதற்கான ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பும் சில நாட்கள் நடந்தது. ஆனால் திடீரென ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து நம்ரதா விலகிக் கொண்டார். அதன் பின்னரே ஜோதிகா இந்த படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் கடந்த 2000ம் ஆண்டு வம்சி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த படம் ஒன்றில் நம்ரதா அறிமுகமானார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே தான் மகேஷ்பாபு - நம்ரதா இடையே காதல் மலர்ந்தது என்பதும் அதன் பின்னர் 2005 இல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் படத்தில் நம்ரதா நடிக்க ஒப்பந்தமாகி அதன்பின் விலகி தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout