சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்திற்கு மாஸ் ஹீரோ தயார்.

  • IndiaGlitz, [Saturday,August 27 2016]

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படம் ஷங்கரின் எந்திரன், எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி படங்களுக்கு இணையாக ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கடந்த ஜூன் மாதமே தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. சுந்தர் சி இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். 'சங்கமித்ரா' என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படும் இந்த படத்திற்கு கலை இயக்குனராக சாபுசிரில், கிராபிக்ஸ் இயக்குனராக கமலக்கண்ணன், ஒளிப்பதிவாளராக சுதீப் சட்டர்ஜி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றான இந்த படத்தில் மிகப்பெரிய ஸ்டார் வேல்யூ உள்ள ஹீரோவை இதுவரை படக்குழுவினர் தேடி வந்தனர். முதலில் சூர்யா, பின்னர் விஜய் ஆகியோர் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்டவர்களால் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டு சம அளவு ஹீரோ கேரக்டர்கள் அடங்கியுள்ள இந்த படத்தின் ஒரு கேரக்டரில் நடிக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் இன்னொரு ஹீரோ கேரக்டரின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், கோலிவுட் அல்லது டோலிவுட்டில் இருந்து ஒருவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் படக்குழுவினர்களிடம் இருந்து வெளிவரும் என தெரிகிறது.

More News

சூர்யாவின் 'எஸ் 3' படத்தில் இணைந்த பிரபல நடிகை

எந்தவித கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் ஒருசில நடிகைகளில் ஒருவர் ராதிகா. கலைத்துறையின் பரம்பரையில்...

'பாகுபலி 2' படத்தில் எத்தனை கிளைமாக்ஸ்?

பிரமாண்ட இயக்குனர் ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' என்ற மாபெரும் வெற்றிக்கு பின்னர் அவர் தற்போது 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்....

மாதவன் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்

'இறுதிச்சுற்று' வெற்றிக்கு பின்னர் மாதவனுக்கு பல வாய்ப்புகள் தேடி வருகிறது. அப்படி வந்த வாய்ப்புகளில் ஒன்றுதான் இயக்குனர் சற்குணம் இயக்கும் படம்...

நாகேஷ் திரையரங்கத்தில் நயன்தாராவின் நாயகன்

'நெடுஞ்சாலை' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற நடிகர் ஆரிக்கு திருப்புமுனையாக அமைந்த படம் 'மாயா...

சசிகுமாரின் 'கிடாரி' சென்சார் தகவல்கள்

வெற்றிவேல்' என்ற வெற்றி படத்திற்கு பின்னர் சசிகுமார் நடித்து முடித்துள்ள திரைப்படம் வரும் 'கிடாரி', செப்டம்பர் 2ஆம் தேதி...