தந்தை பிறந்தநாள்… கிராம மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கி கொண்டாடிய  பிரபல நடிகர்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு, தனது தந்தையின் பிறந்த நாளை இலவச கொரோனா தடுப்பூசி வழங்கி கொண்டாடி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவும் ஒரு நடிகர் என்ற விஷயம் பலருக்கும் தெரிந்ததே. இவருடைய ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் (மே 31) மகேஷ் பாபுவின் புதிய படமோ அல்லது டிரெய்லரோ ரிலீசாகும். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக மகேஷ் பாபுவின் எந்த படமும் வெளிவராத நிலையில் அனைவரும் பாராட்டும் விதமாக தனது தந்தையின் 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

இதற்காக ஆந்திர மாநிலத்தின் குண்டூர் அடுத்த புர்ரேபாலெம், சித்தாபுரம் எனும் இரண்டு கிராமங்களை தேர்வு செய்து அந்த கிராம மக்களுக்கு நடிகர் மகேஷ் பாபு தனது சொந்த செலவில் தடுப்பூசி வழங்கி இருக்கிறார். இந்நிகழ்வில் கிராம மக்கள் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக நடிகர் மகேஷ்பாபு தனது டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

 

நடிகர் மகேஷ் பாபுவின் இந்தச் செயலைப் பார்த்த அவரது ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதேபோல பிரபலங்கள் பலரும் கொரோனா நேரத்தில் பொது மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனக் கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

More News

இசைஞானி இளையராஜா குறித்து நம்பவே முடியாத சில சுவாரசியத் தகவல்கள்!

ஒவ்வொரு கலைஞனும் தேசிய விருதுக்காக ஆண்டுக் கணக்கில் தவம் கிடக்கும்போது இசைஞானி

பிறந்த நாளில் அவரை என்ன சொல்லி வாழ்த்த? இளையராஜா குறித்து பார்த்திபன்

இன்று இசைஞானி இளையராஜா பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் இசைஞானிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஒரு கோடிக்கும் மேல் கொரோனா நிவாரண நிதி கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் இருந்து வரும் நிலையில் தமிழக அரசு எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

வித்தியாசமான முறை.....! ஆக்சிஜனுக்காக நிதி திரட்டிய யுடியூபர்ஸ்....!

பிரபலமான யுடியூபர்கள்  இணைந்து,  ஆக்சிஜன் உற்பத்தி  மையத்திற்காக  நிதி திரட்டிய சம்பவம்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்தானது ....! பிரதமர் அறிவிப்பு....!

கொரோனா தொற்று காரணமாக சென்ற மாதம் ஏப்ரல்- 14-ஆம், நடைபெறவிருந்த சிபிஎஸ்இ  தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டு இருந்தது