இயக்குனர் ஆகிறார் சூப்பர் ஸ்டார் நடிகரின் தங்கை

  • IndiaGlitz, [Tuesday,November 01 2016]

தெலுங்கு திரையுலகின் முன்னாள் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மகன் மகேஷ்பாபு தற்போது சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நிலையில் இந்த குடும்பத்தில் இருந்து இன்னும் ஒருவர் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். அவர்தான் கிருஷ்ணாவின் மகளும், மகேஷ்பாபுவின் தங்கையுமான மஞ்சுளா.
இவர் ஏற்கனவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான இந்திரா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் மகேஷ்பாபு நடித்த படம் உள்பட ஒருசில படங்களை தயாரித்துள்ள நிலையில் தற்போது மஞ்சுளா இயக்குனராகவுள்ளார்.
இவரது முதல் படத்தில் சந்தீப் கிஷான் ஹீரோவாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மஞ்சுளா தான் தயாரித்த படங்களில் சிறுவேடங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவரது நீண்டநாள் கனவான இயக்குனர் துறையை கையில் எடுத்துள்ளார். இவரது முதல் படத்தில் அண்ணன் மகேஷ்பாபு சிறப்பு தோற்றத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

உலக அழகி ஐஸ்வர்யாராய்க்கு உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மருமகளும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாராய்...

தனுஷின் 'பவர்பாண்டி'யில் இணைந்த செல்வராகவன்

தனுஷ் நடித்த 'கொடி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல ரிசல்ட்டை பெற்றுள்ள நிலையில் அவர் தற்போது 'பவர்பாண்டி' என்ற படத்தை முதன்முதலாக இயக்கி வருகிறார்...

அடுத்தடுத்த படங்கள் குறித்து கார்த்தி கூறியது என்ன?

கார்த்தி முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்த 'காஷ்மோரா' மிகப்பெரிய ஹிட்டாகியுள்ள நிலையில் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில்...

'திருட்டுப்பயலே 2' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்

 சுசிகணேசன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'திருட்டுப்பயலே 2' படத்தில் பாபிசிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம்...

ரஜினி பிறந்த நாளில் வெளியாகும் ரீரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான மெகா சூப்பர் ஹிட் படம் 'பாட்ஷா'. இந்த படம் வெளியாகி 20 வருடங்களுக்கு மேல் ஆகியும்...