'குண்டூர் காரம்' படத்தில் பீடி குடிக்கும் காட்சி.. மகேஷ் பாபு கொடுத்த விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மகேஷ்பாபு நடித்த ‘குண்டூர் காரம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் அதேபோல் வசூலிலும் சாதனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் மகேஷ்பாபு பீடி குடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளதால் சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். மகேஷ் பாபு போன்ற பெரிய நடிகர்கள் பீடி புகைப்பது போல் நடித்தால் இளைய சமுதாயம் அவரை பார்த்து தவறான முன்னுதாரணத்தை கொண்டு வருவார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தனர்
இதுகுறித்து சமீபத்தில் மகேஷ் பாபு விளக்கம் அளித்துள்ளார். ‘குண்டூர் காரம்’ படத்தில் தான் பயன்படுத்திய பீடி உண்மையான பீடி அல்ல என்றும் அது ஆயுர்வேதத்தில் செய்யப்பட்டது என்றும் அதில் புகையிலை சார்ந்த பொருட்களுக்கு பதிலாக லவங்கப்பட்டைகளால் செய்யப்பட்ட பொருட்கள் இருக்கும்’ என்றும் அவர் கூறினார்.
’முதலில் தனக்கு உண்மையான பீடியை கொடுத்ததாகவும் ஆனால் அதை புகைத்ததும் ஒற்றைத் தலைவலி வந்துவிட்டதால் இனிமேல் பீடி குடிக்க மாட்டேன் என்று மகேஷ் பாபு கூறியதாகவும் இதனை அடுத்து இயக்குனர் த்ரிவிக்ரம், ஆயுர்வேத பீடியை செய்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் நான் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவன் இல்லை, அதனை நான் ஊக்குவிக்கவும் மாட்டேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout