முன்னணி தமிழ் நடிகர்களுக்கு சமமானவர் மகேஷ்பாபு: கலைப்புலி எஸ்.தாணு
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று சென்னையில் நடைபெற்ற 'ஸ்பைடர்' இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட்டின் பல பிரமுகர்கள் மகேஷ்பாபுவின் தமிழ் எண்ட்ரிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மகேஷ்பாபு நான்கு முன்னணி தமிழ் நடிகர்களுக்கு இணையானவர் என்று 'தெறி', 'கபாலி' படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறினார்.
நடிகர் மற்றும் இயக்குனரும் 'ஸ்பைடர்' படத்தின் வில்லனுமான எஸ்.ஜே.சூர்யா பேசியபோது, 'நான் மகேஷ்பாபுவுடன் 'நானி' படத்தில் பண்புரிந்தபோது அவர் ஒரு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தும் மிக எளிமையாக, அனைவரிடத்திலும் எளிதில் பழகும் தன்மையுடையவராக இருந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்' என்று கூறினார்
மேலும் தமிழ்நாடு திறமையுள்ளவர்களை சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொள்ளும் என்றும், ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று தமிழக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை போல மகேஷ்பாபுவையும் ஏற்றுக்கொள்வார்கள்' என்றும் கூறினார். மேலும் 'ஸ்பைடர்' திரைப்படம் ரஜினியின் சந்திரமுகி' படத்தை போல மிகப்பெரிய ஹிட்டாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் பேசியபோது, 'தான் மதராசப்பட்டணம் படத்தை மகேஷ்பாபுவை மனதில் வைத்தே எழுதியதாகவும், ஆனால் ஒருசில காரணங்களால் தான் நினைத்தது நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்
இந்த படத்தில் நடித்துள்ள ஆர்ஜே பாலாஜி பேசியபோது, 'தான் மகேஷ்பாபுவின் நண்பனாக இந்த படத்தில் நடித்துள்ளதாகவும், மகேஷ்பாபு தமிழை மிக அழகாக சென்னை கல்லூரி மாணவனை போல உச்சரிப்பதாகவும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments