என்னால் முடியாததை என் மகள் சாதித்துவிட்டார்! மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஸ்டார் நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்துவரும் நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய 11 வயது மகளின் சாதனையை ரசிகர்களுடன் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார். இதுகுறித்த பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
தெலுங்கில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கிருஷ்ணா. சமீபத்தில் மறைந்த இவருடைய மகன் மகேஷ் பாபு தற்போது தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார். அதிலும் சமீபத்தில் வெளியாகிய இவருடைய படங்களான ‘சர்க்காரு வரி’ மற்றும் ‘சரிலேரு நீக்கேவரு’ திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் தன்னுடைய 28 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய 24 வருட சினிமா வாழ்க்கையில் நான் சாதிக்காததை என்னுடைய மகள் சிதாரா சாதித்துவிட்டார் என்று நடிகர் மகேஷ் பாபு பதிவு ஒன்றினை தனது சமூகவலைத் தளப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவருடைய 11 வயது மகள் சிதாரா ஏற்கனவே யூடியூப் போன்ற சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருந்துவந்த நிலையில் சமீபகாலமாக மாடலிங்கிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் நடித்துள்ள நகை விளம்பரம் குறித்த விளம்பரப் படங்கள் அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயர் கட்டிடத்தில் பிரம்மாண்டமாக காட்சிப் படுத்தப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் மகேஷ்பாபு மிகவும் பெருமைப்படுகிறேன் என்று தனது மகளின் சாதனையை கொண்டாடி தீர்த்து வருகிறார்.
கடந்த 1999 இல் சினிமா துறைக்கு அறிமுகமான நடிகர் மகேஷ்பாபு தற்போது வரை 27 திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்களில் பெரிய அளவிற்கு ஹிட் அடித்த நிலையில் தன்னால் செய்ய முடியாததை தன்னுடைய 11 வயது மகள் சிதாரா செய்து முடித்திருக்கிறார் என்று பெருமைப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2005 இல் நம்ரதா ஹிரோத்கர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் மகேஷ் பாபுவிற்கு கௌதம் என்ற மகனும் சிதாரா என்ற மகளும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Lighting up the Times Square!! 💥💥💥 So so proud of you my fire cracker ♥️♥️♥️ Continue to dazzle and shine!! 😘😘😘 #SitaraGhattamaneni pic.twitter.com/3ALO0HGNMy
— Mahesh Babu (@urstrulyMahesh) July 4, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments