மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' டிரைலர் விமர்சனம்
- IndiaGlitz, [Friday,September 15 2017]
பொதுமக்களை போனில் யாராவது மிரட்டி அதனால் அவர்கள் உதவி என்று கேட்டால் என்னுடைய சாப்ட்வேர் ஆன் ஆகி சிஸ்டம் லிங்க் ஆகும் என்று தனது வழக்கமான டெக்னாலஜி பாணியில் ஸ்பைடரை ஆரம்பிக்கின்றார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
அதிரடி சண்டைக்காட்சிகள், ராகுலுடன் ரொமான்ஸ், வில்லன் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஆக்ரோஷ மோதல், என மகேஷ்பாபு ஒரு ஆக்சன் ஹீரோவுக்குரிய அனைத்து அம்சங்களையும் சிறப்பாக செய்துள்ளார் என்பது டிரைலரில் இருந்து தெரியவருகிறது.
வழக்கமாக முருகதாஸ் படங்களில் ஹீரோயின்கள் பாடலுக்கும் ரொமான்சுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் கதையிலும் பங்கு பெறுவர். இந்த படத்திலும் ராகுல் ப்ரித்திசிங் கேரக்ருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று தெரிகிறது.
ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு சாலையில் உள்ள கார்களை அப்பளம் போல் நொறுக்கும் காட்சி ஷங்கர் படங்களுக்கு இணையானதாக உள்ளது.
எஸ்.ஜே.சூர்யாவின் கோபம், ஏளனச்சிரிப்பு அவரை நிரந்தர வில்லனாக்கும் வாய்ப்பு உள்ளது.
அட்டகாசமான கேமிரா, கச்சிதமான் எடிட்டிங், ஆர்ப்பரிக்கும் பின்னணி இசை ஆகியவை படத்தின் பிளஸ்கள் என்பது டிரைலரை பார்க்கும் அனைவருக்கும் புரிகிறது
மொத்தத்தில் ஒரு வித்தியாசமான ஆக்சன் படத்தை எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள் மகேஷ்பாபு-முருகதாஸ் கூட்டணி