close
Choose your channels

வெற்றி ஒரு முற்றுப்புள்ளி அல்ல, அது ஒரு கமா: மகரிஷி டீசர் விமர்சனம்

Saturday, April 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு நடித்த 'மகரிஷி' படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வெளிநாட்டு லொகேஷனில் ஹெலிகாப்டரில் இருந்து கம்பீரமாக மகேஷ்பாபு இறங்கி வரும் காட்சியுடன் டீசர் தொடங்குகிறது. ரிஷிகுமாரின் உங்கள் வெற்றி முடிந்துவிட்டதா? என்று நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் மகேஷ்பாபு, 'வெற்றியில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது, அது ஒரு கமா என்றும் வெற்றி என்பது முடிவுக்கு வரும் ஒரு விஷயம் அல்ல, அது ஒரு பயணம் என்று அழுத்தமாக கூறுகிறார்.

மகேஷ்பாபு படங்களுக்கே உரிய அதிரடி சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்களும் இந்த டீசரில் இருப்பது அவரது ரசிகர்களுக்கான சரியான விருந்து. குறிப்பாக 'எனக்கு ஒரு பிரச்சனை உண்டு. யாராவது என்னிடம் நீ தோத்துடுவேன்னு சொன்னா, அவன்கிட்ட என் வெற்றியை நிரூபிக்கும் கெட்ட பழக்கம் எனக்கு உண்டு' என்று மகேஷ்பாபு பேசும் வசனம், 'பைரவா' படத்தில் விஜய் பேசும் 'எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு, சொன்ன சொல்ல காப்பாத்துறது' என்ற வசனத்திற்கு இணணயாக உள்ளது.

வரும் மே மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே, அல்லரி நரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் மோஹனன் ஒளிப்பதிவில் ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment