விஜய்-அஜித் ரசிகர்களுக்கு சளைக்காமல் மோதிய மகேஷ்பாபு ரசிகர்கள்

  • IndiaGlitz, [Saturday,February 10 2018]

சமூக வலைத்தளத்தில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வது என்பது கிட்டத்தட்ட அன்றாடம் நடைபெறும் ஒரு நிகழ்வு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் விஜய், அஜித் ரசிகர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தற்போது நிரூபித்துள்ளனர். ஆம், அவர்கள் மோதியது சாதாரண நடிகருடன் அல்ல. ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் ரசிகர்களுடன் என்பது குறிப்பிடத்தக்கது

டாப்குரூஸ் நடித்து வரும் மிஷன் இம்பாஸிபிள் 6' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலரில் உள்ள டாம்குரூஸ் சாகச காட்சிகள் குறித்து அவரது ரசிகர்கள் புகழ்ந்து டுவீட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மகேஷ்பாபு ரசிகர்கள் களத்தில் குதித்து, 'அகடு' படத்தில் மகேஷ்பாபுவின் சாகச காட்சிகளுடன் ஒப்பிடும்போது டாம்குரூஸ் சாகச காட்சிகள் அவ்வளவு பிரமாதம் இல்லை என்று டுவீட் செய்து டாம்குரூஸ் ரசிகர்களை வம்புக்கு இழுத்துள்ளனர். இதனால் டாம்குரூஸ் ரசிகர்களும், மகேஷ்பாபு ரசிகர்களும் டுவிட்டரில் காரசாரமாக மோதி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் பிரபலமான, சாகச காட்சிகளில் டூப் இன்றி நடிக்கும் டாம்குரூஸூடன் ஒப்பிடும் அளவுக்கு மகேஷ்பாபு தகுதியுடையவர்தானா? என்பதை ரசிகர்களின் கணிப்புக்கே விட்டுவிடுவோம்

 

More News

'பேட்மேன்' சவாலை ஏற்றுக்கொண்ட நடிகை காஜல் அகர்வால்

அக்சயகுமார் நடிப்பில் உருவான நாப்கின் குறித்த விழிப்புணர்வு திரைப்படமான 'பேட்மேன்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

2.0வை முந்தியதா காலா: ரிலீஸ் தேதி இதோ:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரித்த 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில்

சன்னி லியோன் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

சன்னிலியோன் தமிழ் உள்பட மூன்று மொழிகளில் நடித்து வரும் 'வீரமாதேவி' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் சன்னிலியோன் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும்

கமல் டைட்டில், மூன்று ஹீரோயின்கள்: ஜெய் காட்டில் மழை

நடிகர் ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பலூன் மற்றும் கலகலப்பு 2' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் தற்போது 'நீயா 2' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினியின் 'காலா' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் மாஸ் போஸ்டர்: தனுஷ்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் '2.0' மற்றும் 'காலா; ஆகிய இரண்டு திரைப்படங்களும் இவ்வருடம் ரிலீஸ் ஆகும் என்பது ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இரண்டில் எந்த படம் முதலில் வெளியாகும்