12 வயதில் இப்படி ஒரு தாராளமா மனசா? முதல் வருமானம் ஒரு கோடி ரூபாயை என்ன செய்தார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மகேஷ் பாபுவின் மகளுக்கு தற்போது 12 வயது மட்டுமே ஆகும் நிலையில் அவருக்கு முதல் வருமானமாக ஒரு கோடி ரூபாய் கிடைத்துள்ள நிலையில் அந்த பணத்தை அவர் தனது தேவைக்காக வைத்துக் கொள்ளாமல் அந்த பணத்தை அவர் பயன்படுத்திய விதத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் மகன் கவுதம் அவ்வப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்த வருகிறார். இந்த நிலையில் 12 வயதாகும் மகள் சித்தாரா வெளிநாட்டில் படித்து வரும் நிலையில் அவருக்கும் நடிப்பில் ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஆடை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிப்பதற்காக சித்தாராவுக்கு வாய்ப்பு வந்த நிலையில் அதை ஏற்றுக் கொண்டு அவர் நடித்தார். இதற்காக அவருக்கு அந்த ஆடை நிறுவனம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கியதாக தெரிகிறது.
அந்த பணத்தை அவர் தனது சொந்த செலவுக்கு வைத்துக் கொள்ளாமல் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அப்படியே நன்கொடையாக கொடுத்து விட்டதாக தெரிகிறது. 12 வயதில் மகேஷ் பாபுவின் மகள் செய்த இந்த நெகிழ்ச்சியான செயலை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments