பிரபல நடிகரின் 2 வங்கிக்கணக்குகள் முடக்கம்: ஜி.எஸ்.டி. ஆணைய அதிகாரிகள் அதிரடி

  • IndiaGlitz, [Friday,December 28 2018]

பிரபல தெலுங்கு நடிகரும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'ஸ்பைடர்' படத்தின் நாயகனுமான மகேஷ்பாபுவின் இரண்டு வங்கிக்கணக்குகளை ஜிஎஸ்டி ஆணைய அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

கடந்த 2007-08ஆம் ஆண்டில் ஒரு நிறுவனத்தின் விளம்பரதாரராக மகேஷ்பாபு செயல்பட்டு வந்ததாகவும், அந்த வருமானத்திற்காக அவர் சேவை வரி கட்டவில்லை என்றும், இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் மகேஷ்பாபு அதற்கு பதில் அளிக்காததால் மகேஷ்பாபுவின் பெயரில் இருந்த இரண்டு கணக்குகளை ஜிஎஸ்டி அதிகாரிகள் முடக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த இரண்டு வங்கிகளில் உள்ள மகேஷ்பாபுவின் கணக்கில் இருந்து அவர் செலுத்த வேண்டிய சேவை வரிபாக்கி ரூ.73 லட்சம் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.